அடுத்த ஆண்டு 500,000 இல்லத்தரசிகளை சொக்சோவில் பதிவு செய்ய மனிதவள அமைச்சு இலக்கு

அடுத்த ஆண்டு இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் (SKSSR) கீழ் 500,000 இல்லத்தரசிகளைப் பங்களிப்பாளர்களாகப் பதிவு செய்ய மனிதவள அமைச்சகம் இலக்குக் கொண்டுள்ளது என்று, மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் சிந்தனையில் உருவான இந்தத் திட்டம், டிசம்பர் 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது என்றும், டிசம்பர் 8 ஆம் தேதி வரை மொத்தம் 1,092 பங்களிப்பாளர்கள் தானாக முன்வந்து பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் பங்களிக்கும் இல்லத்தரசிகள், தொடர்ந்து 12 மாதங்களுக்கு பாதுகாப்பைப் பெற ஒரு வருடத்திற்கு RM120 ஐ முன்கூட்டியே செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட நபர் மலேசிய குடிமகனாகவோ அல்லது 55 வயதுக்குக் குறைவான நிரந்தர குடியிருப்பாளராகவோ இருத்தல் வேண்டும் என்றும் இதற்க்கு வயது வரம்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

அத்தோடு இந்த திட்டத்தின் கீழ் பங்குபற்றும் இல்லத்தரசிகள் RM200 முதல் RM50,000 வரை பெறுவார்கள். காயங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கு ஏற்ப இது அமையும்.

மருத்துவம், நிரந்தர ஊனமுற்றோர், உடல் அல்லது தொழில்சார் மறுவாழ்வு, டைலசிஸ், மரண ஆகாத நிதி மற்றும் ஓய்வூதிய இழப்பீடு வழங்கப்படும் என்று சிவகுமார் கூறினார்.

இந்த இலக்கை அடைவதற்கு, குறித்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றை மனிதவள அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here