பகாங் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு

புதிய பகாங் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சிக்குழு குழு உறுப்பினர்கள் தங்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க ஒரு குழுவாக பணியாற்ற இணைந்துள்ளனர்.

முன்னதாக     ஆட்சிக்குழு  உறுப்பினர்களின்   (Exco)   இலாகாக்களை அறிவித்த மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், பகாங் தொடர்ந்து செழித்து வருவதை உறுதிசெய்ய அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றார்.

அனைத்து ஆட்சிக்குழு  உறுப்பினர்களும் (Exco) அரசியல் உணர்வுகள், கருத்தியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வுக்கு  ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும். கடமைகளை விடாமுயற்சியுடனும் நேர்மையுடனும்  நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டிய  நேரம் இது என்றும்  கூறினார்.

வாராந்திர  கூட்டங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டு  அவற்றின் செயல்திறன் கண்காணிக்கப்படும். ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அந்தந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   அவர்கள்     உடனடியாக தங்கள் வேலையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

 புதிய மாநில செயற்குழு உறுப்பினர்கள்:

1. வான் ரோஸ்டி (திட்டமிடல், நிதி, நிலம், இயற்கை வளங்கள், ஆற்றல் மற்றும் நீர், பொருளாதார மேம்பாடு, தோட்டம் மற்றும் பொருட்கள்)

2. Datuk Seri Ir Mohd Sofi Abd Razak (விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில், உயிரி தொழில்நுட்பம் மற்றும் கல்வி)

3. டத்தோஸ்ரீ சையத் இப்ராஹிம் சையத் அஹ்மத் (இஸ்லாமிய மத விவகாரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் Orang Asli  விவகாரங்கள்)

4. டத்தோ முகமது ஃபக்ருதீன் முகமட் ஆரிஃப் (பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் சுகாதாரம்)

5. ரசாலி காசிம் (ஃபெல்டா விவகாரங்கள், கூட்டுறவு மற்றும் தொழில்முனைவோர்)

6. டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருன் (உள்ளாட்சி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பம்)

7. டத்தோ நிசார் முகமட் நஜிப் (முதலீடு, தொழில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை)

8. டத்தோ சபரியா சைதன் (சமூக நலன், பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாடு)

9. Fadzli Mohamad Kamal. (தொடர்புகள் மற்றும் மல்டிமீடியா, இளைஞர்கள், விளையாட்டு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்)

10. Sim Chon Siang  (நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மனித வளங்கள்)

11. Leong Yu Man  (ஒற்றுமை, சுற்றுலா மற்றும் கலாச்சாரம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here