அரசு அலுவலர்கள் மட்டுமின்றி தேவைப்படுபவர்களுக்கும் SANITARY PADS அவசியம்: நான்சி

அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி  தேவைப்படுபவர்களுக்கும்  சானிட்டரி பேட்கள்  (SANITARY PADS)  வழங்க   அரசாங்கம் உதவ வேண்டும் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி கூறினார்.  ஒராங் அஸ்லி மற்றும்  B40  தரப்பினருக்கு முன்னுரிமை  தரப்படவேண்டும்.

வறுமையை போக்க சுகாதார அமைச்சின் கட்டிடத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளிலும் தனது அமைச்சகம் இலவச சானிட்டரி பேட்களை வழங்குவதாக சுகாதார அமைச்சர் டாக்டர்  Zaliha Mustafa  திங்களன்று தெரிவித்திருந்தார்.  சுகாதார அமைச்சகத்தின் முன்முயற்சி அதன் எல்லைகளுக்கு அப்பால் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நான்சி கூறினார்.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் இந்த விஷயத்தில் இளம் பெண்களுக்கு  கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

Zaliha   வின் இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் பெர்சத்து தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜான் ஆகியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here