பத்தாங் காலி நிலச்சரிவுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 11 பேரின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

சிலாங்கூரின் பத்தாங் காலியில் இன்று அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவுச் சம்பவத்தில் பலியான 11 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணி வரை அவர்களது சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

மருத்துவமனையின் தடயவியல் மருத்துவக் குழு, காவல்துறையின் பிரேதப் பரிசோதனை உத்தரவுக்காகக் காத்திருக்கும் வேளையில், உடலை அடையாளம் காணும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்து தரவுகளைச் சேகரித்து வருவதாக அவர் கூறினார்.

“பிரேத பரிசோதனை தொடர்பில் கடுமையான நடைமுறைகள் உள்ளன, நாங்கள் பிரேத பரிசோதனை உத்தரவைப் பெறாத வரை, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள முடியாது,” என்று அவர் இன்று சுங்கை பூலோ மருத்துவமனை தடயவியல் துறையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here