பாகாங்கில் வெள்ள நிலைமை சீரடைந்ததால், அங்கு செயற்பாட்டிலிருந்த அனைத்து நிவாரண மையங்களும் இன்று மூடப்பட்டன

பாகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்ததால், அங்கு இயங்கி வந்த அனைத்து வெள்ள நிவாரண மையங்களும் இன்று சனிக்கிழமை (டிச. 17) மூடப்பட்டதாக, பகாங் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பெக்கானின் சுங்கை மியாங்கில் உள்ள SK சின்னார் முத்தியாராவில் தங்கியிருந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும், அவர்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர், அந்த நிவாரண மையம் இன்று காலை 11 மணிக்கு மூடப்பட்டது.

பெக்கானைத் தவிர, ரவூப், லிப்பிஸ், தெமர்லோ, ஜெரான்டுட் மற்றும் பெரா ஆகிய மாவட்டங்களும் கடந்த வாரம் பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

எவ்வாறாயினும், நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பகாங்கின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) இரவு அல்லது அதற்கு முன்னதாக வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here