பத்தாங் காலி நிலச்சரிவு: இதுவரை 15 சடலங்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

பத்தாங் காலி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் அவர்களது குடும்ப உறுப்பிர்களினால் அடையாளம் காணப்பட்ட, மொத்தம் 15 பேரின் சடலங்கள், அவர்களின் குடும்பங்களிடம் அல்லது நெருக்கமான உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இன்று நண்பகல் வரையில், ஒன்பது சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் இருக்கின்றன.

அவர்கள் தொடர்பில் எதேனும் தகவல்கள் தெரிந்தோர் அல்லது அடையாளம் காணக் கூடியவர்களை சுங்கை பூலோ மருத்துவமனைக்கு வருமாறு, உலு சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் சுஃபியன் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரையில் சடலம் ஏதும் மீட்கப்படவில்லை.

வெள்ளிக்கிழமை பின்னிரவு 2 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலச் சரிவில் மொத்தம் 33 பேர் புதையுண்டதாக கூறப்பட்டது.

அவர்களில் 24 பேரின் சடலங்கள் மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டிருக்கும் வேளையில், எஞ்சிய ஒன்பது பேரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பேரிடர் நிகழ்ந்தபோது சம்பந்தப்பட்ட முகாம் பகுதிகளில் இருந்த இதர 61 பேர் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

இதுவரையில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் 15 சடலங்களில் ஒருவர் இளைஞர், எண்மர் பெண்கள், இருவர் சிறுவர்கள், மூவர் சிறுமிகள் என்று, சுஃபியன் அப்துல்லா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here