8 மாநிலங்களில் டிச.20ஆம் தேதி வரை தொடர் மழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்: தெரெங்கானு, கிளந்தான், பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய 8 மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை (டிச. 20) வரை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தொடர் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சனிக்கிழமை (டிசம்பர் 17) அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரெங்கானுவில் தொடர்ச்சியான மிகக் கனமழை (ஆபத்து) பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கிளந்தான் மற்றும் பகாங்கில் தானா திங்கி, கேமரூன், லிபிஸ் மற்றும் ஜெராண்டூட் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை (கடுமையான) எதிர்பார்க்கப்படுகிறது. .

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் (கெரியன், லாரூட், மாதாங் மற்றும் செலாமா, உலு பேராக் மற்றும் கோல கங்சார்), பகாங் (மாரான், குவாந்தன், பெக்கான் மற்றும் ரொம்பின்) மற்றும் ஜோகூர் (செகமாட், குளுவாங்), மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு) ஆகிய இடங்களில் தொடர் மழை (எச்சரிக்கை) இருக்கும் என்றும் மெட்மலேசியா கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here