அன்வார் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, புதிய சபாநாயகர் தேர்வு குறித்து அனைவரும் ஆவலாக உள்ளனர்

15ஆவது பொதுத் தேர்தலில் எந்த ஒரு கூட்டணியும் அல்லது கட்சியும் அரசாங்கத்தை அமைக்க தனிப்பெரும்பான்மை பெறவில்லை.இது நாட்டின் முதல் தொங்கு நாடாளுமன்றத்திற்கு வழிவகுத்தது. பின்னர்  பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி அதிக இடங்களைப் பெற்றதால்  அன்வார் இப்ராஹிம் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து  முதல் முறையாக திவான் ராக்யாட் கூடுகிறது.

தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில், பல கூட்டணிகள், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவில் கட்டமைக்கப்பட்ட தனது பெரும்பான்மையை சோதித்து பார்ப்பதுதான் நாடாளுமன்ற வேலைகளின் முதல் உத்தரவுகளில் ஒன்று என்று அன்வார் அறிவித்தார்.  Bersih  தலைவர்  Thomas Fann   நம்பிக்கை வாக்கெடுப்பு, அன்வாரின் புதிய அரசாங்கத்தின்  மீது மக்களுக்கு ஏற்படக்கூடிய எந்த சந்தேகத்தையும் நிவர்த்தி செய்யும் என்றார்.

யுனிவர்சிட்டி மலாயாவின் அரசியல் ஆய்வாளர் Awang Azman Pawi  பிரதமரின் நியமனம்  Yang di-Pertuan Agong  மற்றும் ஆட்சியாளர்கள் மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றார். அவரது ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடாமன்ற உறுப்பினர்கள் மன்னரின் முடிவுக்கு எதிராக திரும்ப வாய்ப்பில்லை என்றார்.

அன்வார் கீழ்சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவை பெற்றிருப்பதாகக் கூறினார், வெள்ளிக்கிழமை ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். புதிய நாடாளுமன்றக் கூட்டத்தின் மற்ற முக்கியமான  செயல்பாடுகளில்    புதிய துணை சபாநாயகர்களை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு  இருக்கும்.

புதிய ஆண்டிற்கான அரசாங்கத்தின் தேசிய வரவுசெலவுத் திட்டம்  பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபரில், அப்போதைய நிதியமைச்சர் Tengku Zafrul Aziz2023 ஆம் ஆண்டிற்கான RM372.3 பில்லியன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் அது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசாங்கம் அதன் ஊதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.  இன்று முதல் இரண்டு நாட்களுக்கு திவான் ராக்யாட் கூடுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here