‘எனக்கு பணம் முக்கியமில்லை’ – நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சமந்தா தனது குணாதிசயங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், ”எனக்கு கோபம் வரும்போதெல்லாம் ஜிம்முக்கு சென்று கண்டபடி உடற்பயிற்சி செய்வேன். உடனே கோபம் தணிந்து விடும். நான் பணம், பெயர் புகழுக்காக அலைய மாட்டேன்.

பணம் எனக்கு முக்கியம் இல்லை. நடிப்புதான் முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசிக்கிறேன். செய்யும் வேலையை நேசிக்க முடியாதபோது அதில் எந்தவித சந்தோஷமோ அல்லது பிரயோஜனமோ இருக்காது. எனக்கு நானே பெரிய விமர்சகி.

நம் தவறுகளை நாம் தெரிந்து கொள்ளும்போதுதான் தொழிலில் முன்னேற முடியும். காலம் நமக்கு சாதகமாக இல்லாதபோது நமக்கு எதுவும் கைகூடாது. அந்த சமயத்தில் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன்.

யோசிப்பதை விட்டுவிட்டு தூங்கி விடுவேன். உனக்கு பிடித்தது போலவே நீ இரு. நீ இந்த பூமியின் மீது வந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ அல்லது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்கோ அல்ல. நமக்கு இருப்பதையே நாம் இஷ்டப்பட ஆரம்பித்தால் தேவையானவை எல்லாம் நம்மை தேடி வரும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here