நாடளாவிய ரீதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 63,415 பேராக அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) காலை 6 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 63,415 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.

நாட்டின் எட்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திரெங்கானு மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அம் மாநிலத்தில் உள்ள 10,211 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 37,021 நபர்கள் வெள்ளம் காரணமாக அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெள்ள நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் கிளாந்தானில், ஒன்பது மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, அங்கு 6,897 குடும்பங்களைச் சேர்ந்த 25,353 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பகாங், ஜோகூர் மற்றும் பேராக் ஆகிய பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நட்மா
இன்று செவ்வாய்க்கிழமை காலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பகாங்கில், 235 குடும்பங்களைச் சேர்ந்த 934 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அம்மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களிலுள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பேராக்கில், 17 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் ஜோகூரில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நட்மா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here