முன்னாள் PJ மேயர் பினாங்கு மாநில செயலாளராக நியமனம்

பினாங்கு மாநிலத்தின் புதிய செயலாளராக பெட்டாலிங் ஜெயா  (PJ) முன்னாள் மேயர் சயுதி பாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு உயர்கல்வி அமைச்சகத்தின் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்ற ரசாக் ஜாஃபருக்கு மாற்றாக  அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

52 வயதான சயுதி, இன்று காலை கோம்தாரில் உள்ள முதல்வர் Chow Kon Yeow மற்றும் மாநில நிர்வாகக் குழு முன்பு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஏப்ரல் 2019 முதல் மே 2021 வரை PJ மேயராகப் பணியாற்றிய பிறகு, சயுதி உள்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் அதற்கு முன் காஜாங் மற்றும்  சிப்பாங்   நகராட்சி மன்றங்களின் தலைவராக பணியாற்றினார்.

1995 இல் குடிநுழைவுத் துறையில் அமலாக்க உதவி இயக்குநராக சிவில் சேவையில் தனது பணியைத் தொடங்கினார். சயுதி யுனிவர்சிட்டி மலாயாவில் தென்கிழக்கு ஆசியப் படிப்பில் பட்டமும், Universiti Kebangsaan Malaysia இல் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here