பிப்ரவரி மாதம் மரண தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்: அமைச்சர் அறிவிப்பு

பிப்ரவரி மாத நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மாற்றுத் தண்டனை வழங்குவதற்கு அனுமதிக்கும் வகையில், கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டங்களை அரசாங்கம் திருத்தும் என்று law and institutional reform minister Azalina Othman கூறினார்.

சட்ட திருத்த மசோதாவால் 1,327 மரண தண்டனை கைதிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும். அவர்களுக்கு மாற்று தண்டனை கிடைக்கும் என்று Azalina கூறினார். ஜூன் 10ஆம் தேதி முதல் மரண தண்டனைக்கு தற்காலிக  தடை அமலில் உள்ளதால் இந்த கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்படாத மற்றவர்களுக்கு, மரண தண்டனைக்கு மாற்றான தண்டனைகளை அமல்படுத்தலாம். திருத்தங்கள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.  ஆனால் சரியான தண்டனையை தீர்மானிக்க நீதிமன்றங்கள் முன் வரவேண்டும் என்று Azalina ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தண்டனைக் கொள்கை, உடல் ரீதியான தண்டனை மற்றும் சிறை அமைப்பு, நெரிசல் உள்ளிட்டவற்றைப் பரிசீலித்து அரசாங்கம் குற்றவியல் நீதி முறையை சீர்திருத்துவதாக அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here