பிரிகோ கார்பனாரா பாஸ்தா சாஸ்கள் சிங்கப்பூர் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டன

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரிகோ கார்பனாரா மஷ்ரூம் பாஸ்தா சாஸின் ( Prego Carbonara Mushroom Pasta Sauce) ஒரு தொகுதி கெட்டுப்போனதன் காரணமாக சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) இன்று (வியாழன் -டிசம்பர் 22) வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதாவது பாஸ்தா சாஸ் (665 கிராம்) ஒரு தொகுதி கெட்டுப்போனது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில், அவை “உற்பத்தி பிழை” காரணமாக ஏற்பட்டதாக தி அர்னாட்ஸ் குழுமம் தெரிவித்தது. கெட்டுப்போனதாக நம்பப்படும் சாஸ்கள் – லாட் எண் 2022081716 – ஆகஸ்ட் 17, 2022 அன்று இரவு 10.18 மணி முதல் 11.20 மணி வரை தயாரிக்கப்பட்டது என்றும் அவற்றின் காலாவதி தேதி ஆகஸ்ட் 17, 2023 அது மேலும் கூறியது.

குறித்த சாஸ் விரும்பத்தகாத வாசனை, அசாதாரண நிறம், நீர் போன்ற அமைப்பு மற்றும் திரவத்தின் பிரிக்கப்பட்ட அடுக்குகள் உள்ளிட்ட கெட்டுப்போன அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடும் என்றும் உணவு விற்பனைச் சட்டத்தின் கீழ், நுகர்வுக்குப் பொருத்தமற்றது என்று அறியப்பட்ட உணவுகளை விற்கக் கூடாது என்றும் SFA தெரிவித்துள்ளது.

இதன் இறக்குமதியாளர் கேம்ப்பெல் சூப் நிறுவனத்திற்கு (சிங்கப்பூர் கிளை) குறித்த தயாரிப்புகளை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“சம்பந்தப்பட்ட தயாரிப்பை ஏற்கனவே வாங்கிய பயனர்கள் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதைப் பயன்படுத்தியவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் உடனடியாக ஒரு உடல்நலப் பரிசோதனையைப் பெற வேண்டும்” என்று SFA கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here