நேற்று மாலை 6 மணியளவில் ஜாலான் பத்து 16, பெண்டாங்கில் போலீசார் மேற்கொண்ட தெருக்கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது, சுங்கை பட்டாணி, மெர்போக்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
Honda RS150R வகை மோட்டார் சைக்கிளை சந்தேகத்திற்கிடமான நிலையில் ஓட்டிச் சென்ற 23 வயது பெண் கைது செய்யப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளின் இயந்திர எண்ணை சோதனை செய்ததில் அது திருட்டுப்போனதாக புகாரளிக்கப்பட்டதும் தெரியவந்தது என்று பெண்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை கண்காணிப்பாளர் அரிஸ் ஷாம் ஹமீஷா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு, பெண்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணைக் கைது செய்த போலீசார் மேலதிக விசாரணைக்காக மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளதாக அவர் இன்று தொடர்புகொண்ட போது தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 379A பிரிவின் கீழ், அந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டதாக அரிஸ் ஷாம் கூறினார்.