பொரித்த கோழியை சாப்பிட்ட எலி; உணவகத்தை 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவு

ஒரு உணவகத்தின் உணவு சூடாக்கியில் இருந்து எலி ஒன்று பொரித்து வைத்திருந்த கோழியை சாப்பிடுவதைக் காட்டும் காணொளி தொடர்பில், கோலாலம்பூரில் உள்ள பாண்டான் இன்டாவில் உள்ள ஒரு உணவகத்தை 14 நாட்களுக்கு மூடுமாறு மலேசிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரிவு 11, உணவுச் சட்டம் 1983 இன் கீழ் இந்த மூடல் உத்தரவு வழங்கப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூர் சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின் (BKKM) சுகாதார அமலாக்கக் குழு மற்றும் உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் என்பன இணைந்து, குறித்த உணவாக வளாகத்தில் நேற்று நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“ஆய்வின் முடிவுகள், வளாகத்தின் உணவு தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவைத் தயாரிப்பதில் பல அம்சங்களை பின்பற்ற தவறியதாக உணவு சுகாதார விதிமுறைகள் 2009 இன் கீழ் மொத்தம் ஆறு அபராதங்களும் விதிக்கப்பட்டன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here