ஆஸ்திரேலியாவில் கீரை சாப்பிட்ட 200 பேர் மருத்துவமனையில் அனுமதி: பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களில் ‘பேபி ஸ்பினச்’ என்ற கீரை வகையை சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த கீரையை சாப்பிட்டதன் விளைவாக மக்கள் ‘ஹாலுசினேஷன்’ எனப்படும் சித்தபிரம்மை பிடித்ததுபோலவும், மயக்கம், கண்கள் மங்கலாக இருப்பது, விரைவான இதயத் துடிப்பு என பல உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது விக்டோரியா மாகாணத்தின் காஸ்ட்கோ நகரில் உள்ள ஒரு பண்ணையில் பாதுகாப்பற்ற முறையில் விளைவிக்கப்பட்ட ‘பேபி ஸ்பினச்’ கீரையால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதுபற்றி ஆஸ்திரேலியாவின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பண்ணையில் கீரை விளைவிக்கும் போது தவறுதலாக போதை தரும் கஞ்சா செடியும் போடப்பட்டிருக்கிறது. இதனால் கீரை வகைகள் மாசுபட்டிருக்கிறது. அந்த நச்சு கலந்த கீரையை மக்கள் சாப்பிட்டதன் காரணமாகவே இந்த உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here