மலேசியாவின் பல மாநிலங்களில் வியாழன் வரை பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) விடுத்துள்ளது.
மேற்கு சபா, லாபுவான் மற்றும் கிழக்கு சபா ஆகிய பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வேகத்தில் 4.5 மீட்டருக்கு அலைகள் மேல் எழும்பும் என்றும் வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே எச்சரிக்கை நாளை (டிசம்பர் 27) வரை நிகழும் என எதிர்பார்க்கப்படும் என்றும் காற்றின் நிலை மற்றும் கொந்தளிப்பான அலைகள் காரணமாக அனைத்து கடலோர நடவடிக்கைகளுக்கும் மற்றும் எண்ணெய் சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட கப்பல் போக்குவரத்துக்கும் இந்த வானிலை ஆபத்தானது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த வானிலை சரவாக் கடலில் டிசம்பர் 29-ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சரவாக் கடலில் 4.5 மீட்டர் உயர அலைகளுடன் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.