Who Wants to Be a Millionaire நிகழ்ச்சியில் அன்வார் குறித்த கேள்விக்கு பதிலளித்து 34,000 ரிங்கிட்டை வென்ற ஆடவர்

இந்தியாவின் “Who Wants to Be a Millionaire”  நிகழ்ச்சியில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பற்றிய கேள்விக்கு சரியாக பதிலளித்த ஒருவர், RM34,000க்கு மேல் பணம் சேர்த்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் இந்திய ஹிந்தி மொழி கேம் ஷோவின் (Kaun Banega Crorepati) ஒரு துணுக்கு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

கிளிப்பில், அமிதாப் போட்டியாளர் நிபுன் ராஜனிடம், “2022ல் எந்த நாட்டில், அன்வார் இப்ராஹிம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?”நீஈராக், மலேசியா, பஹ்ரைன் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை வழங்கப்பட்டன.

நிபுன் சரியான விடையாக மலேசியாவைத் தேர்ந்தெடுத்தார், அது அவருக்கு 640,000 ரூபாய் (RM34,180) கிடைத்தது.

கேம் ஷோவுக்கான Wiki-fandom பக்கத்தின்படி, நிபுன் டிசம்பர் 23 அன்று ஒளிபரப்பப்பட்ட Kaun Banega Crorepati தோன்றினார். அவர் 17 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது மற்றும் 12 வது கேள்விக்கு பதிலளிக்கத் தவறியதால் 640,000 ரூபாயுடன் வெளியேறினார்.

10ஆவது பிரதமர் கேம் ஷோவில் இடம்பெற்றதையிட்டு பல மலேசியர்களை பெருமைப்படுத்தி இருக்கிறது அந்த வீடியோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here