தோக்கியோ:
ஜப்பானில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிய இந்த காய்ச்சல் அதன்பின்னர் பல்வேறு மாகாணங்களுக்கும் பரவியது.
தற்போது வரை 70 இலட்சத்துக்கும் அதிகமான கோழிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மற்ற கோழிகளுக்கு பரவாமல் இருக்க அவை கொல்லப்பட்டன.
மேலும் பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளில் 3 கிலோ மீட்டர் சுற்றளவு வரை கோழிகள் மற்றும் அதன் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.