அமெரிக்க நகரை படையெடுத்துள்ள மில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள்..!!

அமெரிக்காவின் நெவேடா மாநிலத்தில் உள்ள எல்கோ நகர மக்கள் வித்தியாசமான சோதனையை எதிர்நோக்கியுள்ளனர்.

‘மொர்மான்’ என்னும் வெட்டுக்கிளிகள் தற்போது எல்கோ நகரில் பார்க்கும் எல்லா திசைகளிலும் காணப்படுகின்றன. சாலைகள், வீடுகள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் மில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் குவிந்துள்ளன.

இவ்வளவு வெட்டுக்கிளிகளைக் கண்ட அந்நகர மக்கள் வெறுத்துப்போய் இப்போது வீட்டிற்குள்ளே அடைந்து கிடக்கின்றனர்.

வெட்டுக்கிளிகள் ஏதோ மழைபோல் வானில் இருந்து கொட்டுவதாக அவ்வட்டாரவாசிகள் கூறுகின்றனர்.

மருத்துவமனைகளிலும் வெட்டுக்கிளிகளின் தொல்லையை தாங்கமுடியவில்லை. நோயாளிகள் தங்களது கைகளில் வெட்டுக்கிளிகளை விரட்ட துடைப்பம், காகிதம் போன்றவற்றை வைத்துக்கொண்டு அவதிபடுகின்றனர்.

நெவேடாவுக்கு இதுபோன்ற வெட்டுக்கிளி சம்பவங்கள் புதிதல்ல. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுப்பகுதிகளுக்குள் குடியேறிவிட்டதால் இந்த பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர் என்று அதிகாரிகள் கூறினர்.

இன்னும் சில நாள்களில் வெட்டுக்கிளிகள் அதன் இருப்பிடங்களுக்கு சென்றுவிடும். அது வரை எல்கோ நகர மக்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here