AFF கிண்ண காற்பந்தாட்டப்போட்டியை முன்னிட்டு, புக்கிட் ஜாலில் இலகு ரயில் சேவை நேரம் நள்ளிரவு 12.30 வரை நீட்டிக்கப்படுகிறது

கோலாலம்பூர்:

AFF கிண்ண காற்பந்தாட்டப் போட்டி 2022 இன் முதல் அரையிறுதிப் போட்டி நாளை சனிக்கிழமை மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு புக்கிட் ஜாலில் இலகு ரயில் (LRT) நிலையத்திற்கான ரயில் சேவை நாளை நள்ளிரவு 12.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக Rapid Rail நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் போட்டி முடிந்ததும் ரயில் பயணிகள் அந்தந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு எதுவாக, கூடுதல் ரயில்களும் சேவையில் ஈடுபடும் என்று, Rapid Rai நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பயணிகள் தங்கள் பயணத்தை எளிதாக்குவதற்கு Touch ‘n Go அட்டையைப் பயன்படுத்தவும், நிலையத்திற்கு வருவதற்கு முன் அவ்வட்டையில் இருப்பு போதுமானதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர் ” என்றும் அது கூறியுள்ளது.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவிட்-19 பரவுவதைத் தடுக்க, ரயில் நிலையப் பகுதியிலும், ரயிலிலும் பயணிக்கும் போது, பயணிகள் முகக் கவசம் அணிவது அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here