கோலாலம்பூர்:
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு நாட்கள் இந்தோனேசியாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
இது இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை அளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் உறுதியான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நவம்பர் 24 அன்று அவர் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு, அன்வாரின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
குறிப்பாக மலேசியாவில் உள்ள இந்தோனேசியத் தொழிலாளர்கள், நிலம் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் மற்றும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்படும் கொள்கை, சீர்திருத்தங்கள், மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான ஆசியான் நாடுகளுக்கிடையிலான தலைமைத்துவம் தொடர்பில் இருவரும் கலந்தாலோசிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
மேலும் மலேசியா -இந்தோனேசியாவின் தனியார்துறைக்கு இடையிலான எட்டு புரிந்துணர்வு ஒப்பனஹங்களும் கைச்சாத்திடப்படும் என்றும் நம்பப்படுகிறது.
“இந்தோனேசியா-மலேசியா உறவுகளில் இன்னும் இணக்கமான மாற்றம் இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்” என்று அரசியல் தொடர்பு ஆய்வாளர் ஹென்றி சாட்ரியோ கூறினார்.