70 வயதான ஆடவர் பிளஸ் அவசர வாகனத்துடன் மோதியதில் உயிரிழந்தார்

ஈப்போ: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பிளஸ் ரோண்டா அவசரகால பணியாளர் வாகனம் மோதியதில் 70 வயதுடைய வாகனமோடடி உயிரிழந்தார். பேராக் காவல்துறைத் தலைவர் யுஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறுகையில், டயர் பஞ்சரான வாகனத்தின் ஓட்டுநருக்கு உதவுவதற்காக பிளஸ் பிக்கப் டிரக் அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டது.

திடீரென்று ஒரு மஸ்டா சிஎக்ஸ்-5 கார் பிக்கப்பின் பின்புறத்தில் மோதியது.பின்னர் சாலையின் வலதுபுறம் சறுக்கியது, பின்னர் அது மற்றொரு வாகனத்தில் மோதியது என்றார். Mazda CX-5 இன் சாரதியான 70 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி 59, தலையில் காயங்களுக்கு சிகிச்சை பெற ஸ்லிம் ரிவர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here