அலோர்ஸ்டார்,
2019-ஆம் ஆண்டு செலாங்கூரின் ஸ்ரீ கெம்பங்கான் அருகே ஒரு வீட்டின் முன் சுடுகாட்டில் கிடந்த பயணப்பையைத் திறந்தபோது, அதில் இருந்த ஒரு ஆண் குழந்தைக்கு தற்போது 6 வயதாகி உள்ளது. இப்போது அந்தக் குழந்தைக்கு பிறந்த சான்றிதழ் மற்றும் பள்ளியில் சேர்வதற்கான நடவடிக்கைகள் செய்ய வேண்டிய நிலையில், சமூக நலத்துறை (JKM) அந்தக் குழந்தையின் உறவினர்களை தேடி வருகிறது.
மொஹ்த் நைம் நிசார் என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, பழுதடைந்த துணியில் வெறும் தொப்புள்கொடி யுடன் 2019 பிப்ரவரி 23 அன்று கண்டுபிடிக்கப்பட்டதாகும். தொடக்கத்தில் அந்தக் குழந்தையை சுங்கை பட்டா ணியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் பராமரித்தனர். பின்னர், 2020 மார்ச்சில் அந்தக் குழந்தையை அலோர் ஸ்டார் அருகேயுள்ள கம்போங்கில் உள்ள மற்றொரு தம்பதியரிடம் ஒப்படைத்தனர் என சமூக நல அலுவலக அதிகாரியான நத்ரோ அகமட் கூறினார்.
பிறந்த சான்றிதழ் பெறும் பணிக்காகவும், பள்ளியில் சேர்க்கும் சட்டமுறை செயல்முறைகளுக்காகவும், குழந்தையின் உயிர்த்தொடர்புகளை கண்டறிவது அவசியமாக உள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. அதற்காக உறவினர்கள் உடனடியாக 04-7202370 என்ற எண்களில் சமூக நல அலுவகத்தை தொடர்புகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
























