உலு திரெங்கானுவில் திடீர் வெள்ளம்; 43 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம்

உலு திரெங்கானு பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 15 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10 மணி நிலவரப்படி, மொத்தம் 15 குடும்பங்களின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களை தங்க வைப்பதற்காக உலு திரெங்கானுவில் உள்ள பாலைரயா கம்போங் கெமாட்டில் ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இதுவரை பெய்த தொடர் மழையால், ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், தற்போது மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்றும் அது தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு, டிசம்பர் 18 இல் தொடங்கி திரெங்கானுவை எதிர்பாராத வெள்ளம் புரட்டிப்போட்டதில் 40,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here