சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) முதல் நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவிற்கு வருகை தருகிறார்.
பாலகிருஷ்ணனின் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்தும் என்றும் மலேசியாவின் புதிய அரசாங்கத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, சிங்கப்பூர் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவையும் சந்திப்பார் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி, தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் உட்பட பிற மலேசிய அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களையும் அவர் சந்திப்பார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.