வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் சமந்தா

நடிகை சமந்தா சினிமாவில் படுபிஸியாக இருந்த நேரத்தில் திடீரென மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையிலும் சமந்தா அவரது படத்தின் பணிகளையும் இடையிடையே செய்து வருகிறார். அவர் நடித்து இருக்கும் சாகுந்தலம் படத்தின் விழாவில் கலந்து கொண்ட அவர் மேடையில் கண்ணீர் விட்டது ரசிகர்களையும் கலங்கவைத்துவிட்டது.

தற்போது சமந்தா அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் சோஃபா மீது படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் அவரது செல்ல நாய் அருகில் அவரை தட்டி கொடுத்திருக்கிறது. “Don’t worry mommy.. I got your back” என நாய் சொல்வது போல அந்த போட்டோவை பகிர்ந்து இருக்கிறார் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here