ஈரான் வான்பரப்பு பதற்றம்: இண்டிகோ விமானச் சேவை முடக்கம் – நான்கு நாடுகளுக்குப் பாதிப்பு!

புதுடெல்லி:

த்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, ஜார்ஜியா உட்பட நான்கு நாடுகளுக்கான தனது விமானச் சேவைகளை இண்டிகோ நிறுவனம் ஜனவரி 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இண்டிகோ நிறுவனம் பின்வரும் நாடுகளுக்கான சேவைகளை நிறுத்தியுள்ளது: அவற்றில் ஜார்ஜியா (Tbilisi), கஜகஸ்தான் (Almaty), உஸ்பெகிஸ்தான் (Tashkent), அசர்பைஜான் (Baku) ஆகிய நாடுகள் பாதிப்படைந்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், ஈரான் வான்பரப்பை (Airspace) வணிக ரீதியான விமானங்கள் பயன்படுத்துவது அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here