அமிருதீன்: மாநிலத் தேர்தலுக்கு முன் தலைவர்களின் பங்கு மிக முக்கியம்

ஒற்றுமை அரசு தொடர்பான தகவல்களையும் அறிவொளியையும் தெரிவிப்பதில் உள்ளூர் தலைவர்களின் பங்கு, வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மந்திரி பெசார்  அமிருதீன், மக்கள் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க வளர்ச்சி முயற்சிகளில் கவனம் செலுத்துவதும் உள்ளூர் தலைவர்களின் திறமையும் முக்கியம். இதனால் அடிமட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

இந்த முறை (மாநில தேர்தல்) பிரச்சாரத்திற்காக, டிஜிட்டல் பிரச்சாரத்தின் வடிவத்தில் எங்கள் வரம்பை அதிகரிப்போம் என்பது உறுதி. இதற்கு முன்பு நாங்கள் இதை (டிஜிட்டல் பிரச்சாரம்) செய்திருந்தாலும் அனுபவத்தின் அடிப்படையில் டிஜிட்டல் மற்றும் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதற்கும் இடையில் சமநிலையை வைத்திருக்க வேண்டும்  என்று அவர் இன்று உலுகிளாங் தியோங் ஹுவா சமூகத்துடன் உயர் தேநீர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த தேர்தலில் நான் வெற்றி பெற்ற பல உள்ளாட்சிகளைப் பார்க்கும்போது டிஜிட்டல் பிரச்சாரம் (முக்கியமானது) மட்டுமல்ல, சிறப்பாகவும் திறமையாகவும் செயல்படும் உள்ளூர் தலைவர்களின் இருப்பும் நிறைய உதவும் என்பதை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ கவுன்சில் தலைவரான அமிருதீன், இந்த முயற்சியானது வாக்குப்பதிவு நாள் வரை பிரச்சாரக் காலம் முழுவதும் கட்சியில் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here