ரவாங் பாலர் பள்ளியில் ஆறு வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியை கைது

கோம்பாக்:

வாங்கின் கோத்தா எமரால்டில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 30 வயது பெண் ஆசிரியை ஒருவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோம்பாக் மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் பிற்பகல் 2 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை நேற்று இரவு 11.13 மணிக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து, அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டதாக கோம்பாக் மாவட்ட காவல் தலைமை உதவி ஆணையர் நூர் அரிஃபின் முகமது நசீர் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் மே 26 அன்று காலை 10 மணியளவில் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் 34 வயதான தந்தை வீட்டில் இருந்தபோது தனது மகளின் தலையில் காயங்கள் இருப்பதைக் கண்டதாகக் கூறினார்.

“குறித்த பாலர் பள்ளியில் இருந்தபோது அந்த ஆசிரியர் பேனாவைப் பயன்படுத்தி காயத்தை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சிறுமி சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தலையில் காயங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக நூர் அரிஃபின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here