மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நான்கு இந்தோனேசிய ஆண்களையும் ஒரு பெண்ணையும் கடத்தியதாக (மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக) ஒரு தொழிலதிபர் மீது நேற்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 36 வயதான Ng Eng Lee என்பவர், டிசம்பர் 22, 2022 அன்று அதிகாலை 2 மணி முதல் பிற்பகல் 3.05 மணிவரை, 30 முதல் 40 வயதுடைய ஐந்து பேரை ஸ்ரீ ஜூரு வணிக மையத்தில் உள்ள ஒரு வளாகத்திலும், புக்கிட் மெர்தாஜாமின் தாமான் ஸ்ரீ ஜூருவில் உள்ள ஒரு வீட்டிலும் வரை கடத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும், அவர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

நபர் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 இன் பிரிவு 12 இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Ng, ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM50,000 மதிப்புள்ள பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிபதி நூர் ஜைனி யூசோப் உத்தரவிட்டார்.

வழக்கை மீண்டும் செவிமடுக்க பிப்ரவரி 21 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here