விடுதி அறையில் டுரியான் சாப்பிட்டதற்காக மலேசிய நடிகை யூமி வோங்கிற்கு 1,000 ரிங்கிட் அபராதம்

டுரியான் மலேசியாவில் “பழங்களின் ராஜா” ஆக இருக்கலாம், ஆனால் இந்த ராஜா சில இடங்களில் வரவேற்கப்படுவதில்லை.

தான் தங்கியிருந்த ஒரு விடுதி அறையில் டுரியான் பழம் சாப்பிட்டதற்காக அவருக்கு RM1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக, ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்ட மலேசிய நடிகை யூமி வோங், கடந்த வியாழன் (ஜனவரி 12) தனது Instagram ஸ்டோரி மூலம் பதிவேற்றினார்.

அவர் பதிவிட்டிருந்த அந்த ஸ்கிரீன்ஷாட்டில், விருந்தினர்கள் அறையில் டுரியான் சாப்பிட அனுமதிக்கப்படாததால், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அவருக்கு RM1,000 அபராதம் விதித்ததாகவும், அதற்கு ஆதாரமாக, ஹோட்டல் ஊழியர்கள் தனது ஹோட்டல் அறை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டுரியான் விதைகளின் புகைப்படத்தையும் அனுப்பினர் என்றும் கூறியிருந்தார்.

“நான் ஒரு முட்டாள். ஹோட்டல்களில் துரியன் சாப்பிட முடியாது என்பது எனக்குத் தெரியாது. இதனால் எனக்கு RM1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த டுரியான் மிகவும் விலை உயர்ந்தது,” என்று அவர் தனது பதிவில் எழுதியிருந்தார்.

டுரியான் பழங்களின் அதிகப்படியான வாசனை காரணமாக ஹோட்டல்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் அவற்றை சாப்பிடுவது நீண்ட காலமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், பாங்கி ரிசார்ட் ஹோட்டல் மலேசியாவின் முதல் டுரியான் நட்பு (டுரியான் பழம் சாப்பிட அனுமதி) ஹோட்டல் மற்றும் ரிசார்ட் ஆக வரலாற்றில் இடம்பிடித்தது. இதன் சாதனை மலேசியா சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்த்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here