ஜனவரி 29 அன்று பேராக் மாநில அரசு சீனப் புத்தாண்டு திறந்த இல்லத்தை உபசரிப்பை நடத்துகிறது

பேராக் அரசாங்கம் ஜனவரி 29 அன்று Lost World of Tambun (LWOT) கேளிக்கை பூங்காவில் பெரிய அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்துகிறது என்று மாநில சுற்றுலா, தொழில், முதலீடு மற்றும் மேம்பாட்டுக் குழுத் தலைவர் Loh Sze Yee தெரிவித்தார்.

நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா கலந்து கொள்வார் என்றும் சுமார் 40,000 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த நிகழ்வுக்கு அனுமதி இலவசம் என்பதால் மாநில அரசு அனைத்து மக்களையும் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here