தஞ்சோங் புனை படகுத்துறை அருகே, போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்று, பெலாட் ஆற்றில் குதித்த பெண், நீரில் மூழ்கி உயிரிழந்ததார்.
பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நீர் மீட்புக் குழுவின் டைவிங் பிரிவால் பாதிக்கப்பட்ட 42 வயது பெண்ணின் உடல், பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டது.
மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் ஜஹாரி வான் புசு கூறுகையில், இன்று காலை 8 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை இரண்டாவது நாளாக தொடர்ந்ததாகவும், சடலம் அவரின் மகனால் அடையாளம் காணப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.