ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகளில் கண்டிபிடிக்கப்பட்ட 2.7 கிலோ இராட்சத தவளை

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள மழைக்காடுகளில் 2.7 கிலோ எடை கொண்ட இராட்சத தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

‘Toadzilla’ என்ற புனைப்பெயர் கொண்ட இந்த தவளை, சாதாரண தவளையை விட ஆறு மடங்கு பெரியதாக உள்ளதாகவும், உலக சாதனையை முறியடிக்கக்கூடியதாகவும் உள்ளது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தான் அந்த தவளையை முதன்முதலில் பார்த்ததாகவும், அது போலியானது என்று நினைத்ததாகவும் வனப் பாதுகாவலரான கைலி கிரே தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் அவர் கூறுகையில், “கால்பந்து போன்ற பெரிய தவளையை இதுவரை நான் பார்த்ததில்லை” என்றார். இது ஒரு பெண் தவளை என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

1991 இல் சுவீடனில் Prinsen என்று பெயரிடப்பட்ட 2.65 கிலோகிராம் எடையுள்ள தவளையை உலகின் மிகப்பெரிய தவளைக்கான தற்போதைய உலக சாதனையாக உள்ளது. இதனை ‘Toadzilla’ முறியடிக்கும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here