இரவு 8 மணி நிலவரப்படி, ஜோகூரிலுள்ள மூன்று ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளதாகவும், ஏனைய நான்கு ஆறுகள் எச்சரிக்கை நிலைகளில் பதிவாகியுள்ளதாகவும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் (JPS) தெரிவித்துள்ளது.
JPS இரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கம்போங் லுபோக் கெப்போங்கில் உள்ள சுங்கை கெமாஸ், சிகாமாட் 19.09 மீட்டர்; லாடாங் சாவில் உள்ள சுங்கை லெனிக், சிகாமாட் 6.76 மீ; மற்றும் கெச்சிலில் உள்ள சுங்கை சிகாமாட் (38.70 மீ) ஆகிய ஆறுகளே எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளன.
மேலும் ஜோகூரிலுள்ள ஏனைய நான்கு ஆறுகள் எச்ரிக்கை அளவை பதிவு செய்துள்ளன. அவையாவன கம்போங் காண்டோவில் உள்ள சுங்கை கஹாங், 14.83 மீட்டர் அளவை பதிவு செய்துள்ளது. அத்தோடு குளுவாங், கம்போங் பாரிட் தெங்கா, மூவார் 3.17 மீ; கம்போங் முர்னி ஜெயாவில் உள்ள சுங்கை சிகு, கூலை, 17.82 மீ மற்றும் கம்போங் அவாத்தில் உள்ள சுங்கை மூவார், சிகாமாட் (19.79 மீ) என்பனவும் அடங்கும்.
இந்நிலையில் சரவாக், பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தலா ஒரு ஆறு எச்சரிக்கை அளவை பதிவு செய்துள்ளதாக ஜேபிஎஸ் தெரிவித்துள்ளது.