இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,014 குடும்பங்களைச் சேர்ந்த 3,612 பேராக உயர்ந்துள்ளது. இது முந்தைய நாள் இரவு 8 மணி நிலவரப்படி 469 குடும்பங்களைச் சேர்ந்த 1,703 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமீபத்திய மாவட்டங்களாக மெர்சிங் மற்றும் பத்து பகாட் ஆகியவை உள்ளன. தற்போது ஜோகூரில் மொத்தமாக ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று இரவு 16 ஆக இருந்த தற்காலிக நிவாரண மையங்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 35 ஆக அதிகரித்துள்ளது” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.