ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த இளம் உதவி டைரக்டர் உயிரிழப்பு…!- சோகத்தில் சாந்தனு

இளம் டைரக்டர் ராமகிருஷ்ணன் (26) ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உண்மையில் சிறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன்.

எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர். ஆனால் கடவுள் அவரை அழைத்துக்கொண்டார். பணி செய்துகொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். வாழ்க்கை நிலையில்லாத ஒன்று. அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னாள் அவர் எனக்கு போன் செய்தபோது என்னால் எடுக்க முடியவில்லை; நான் அவர் அழைப்பை எடுத்திருக்கலாம் என நினைக்கும் போது மன வேதனையளிக்கிறது.

தயவு செய்து தேவையில்லாத வெறுப்புகளையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம். வாழ்க்கை இருக்கும்வரை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களை சிரிக்க வைத்தும் வாழ்வோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.. மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம்.

இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான். நீங்கள் யாரிடமாவது பேசுங்கள், அந்த வலியையும் மன அழுத்தத்தையும் தனியாகச் இருந்து விடாதீர்கள்… அது உங்களைத் தின்றுவிடும்… “என்ன சார் இருக்கு இந்த உலகத்லே…அவ்ளோ எதிர்மறை, வெறுப்பு.. சந்தோஷமா இருங்க.. அன்பைப் பரப்புங்க, அதுக்கு ஒண்ணும் செலவில்லை”…-அதுதான் ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்வார்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவை அடுத்து மறைந்த இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணாவுக்கு பலரும் இணையதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்து கொண்டிருக்கும் போதே இளம் உதவி இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here