சண்டாக்கான் அருகே ரோந்துப் படகு கவிழ்ந்ததில் 7 இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு

நேற்று காலை சபாவின் நுனுயான் தீவுக்கருகில் அருகே ரோந்துப் படகு கவிழ்ந்ததில், கூட்டுப் பணிப் படை தலைமையகம் 2 (ATB 2) ஐச் சேர்ந்த 7 இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

காலை 11 மணியளவில் அவர்களின் ரோந்து படகு பெரிய அலைகளால் தாக்கப்பட்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சபா போலீஸ் கமிஷனர், டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறினார்.

“நேற்றுக் காலை 10 மணியளவில், ATB 2’s Viper 7 என்ற ரோந்துப் படகு, ஏழு இராணுவ வீரர்களுடன் Batu Sapi, Sandakan இல் உள்ள Bakungan Kecil தீவின் ATB 2 தலைமையக படகுத்துறையில் எரிபொருளை நிரப்பி விட்டு, ரோந்துப்பணிக்கு சென்றது.

“இருப்பினும், சுமார் 11 மணியளவில், ரோந்துப் படகு நுனுயான் தீவுக்கருகிலுள்ள கடல் அருகே வந்தபோது, ​​அது பெரிய அலைகளால் தாக்கப்பட்டு (ரோந்து படகு) கவிழ்ந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here