நாட்டின் நான்கு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000 ஐத் தாண்டியுள்ளதாக சபா மாநில மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள 33 நிவாரண மையங்களில் தற்போது தஞ்சம் புகுந்துள்ளவர்களின் எண்ணிக்கை, இன்று காலை 2,412 குடும்பங்களைச் சேர்ந்த 6,843 பேரில் இருந்து 2,966 குடும்பங்களைச் சேர்ந்த 8,523 பேராக அதிகரித்துள்ளது.









