சுங்கை பட்டாணியில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 9 பேர் கைது

இன்று சனிக்கிழமை (ஜனவரி 28) அதிகாலையில் இங்குள்ள புசாட் கொமர்சில் சௌஜானாவில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேடா மாநில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் D7 பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 20 முதல் 47 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர், டத்தோ வான் ஹசான் வான் அகமட் தெரிவித்தார்.

“இந்தச் சோதனையின் போது, கிட்டத்தட்ட RM20,000 பணம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகாலை 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மணி நேர நடவடிக்கையின் போது, சந்தேக நபர்களில் ஒருவர் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளின் ஏற்பாட்டாளர் என நம்பப்படுவதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் என்றும், மேல் நடவடிக்கைக்காக கோல மூடா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here