செல்பி எடுக்க முயன்ற ரசிகர்… செல்போனை தூக்கி வீசிய ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் ரன்பீர் கபூருடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். அதே சமயம் போட்டோகிராபர்கள் பலர் ரன்பீர் கபூரை அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் ரன்பீர் கபூர் சிரித்துக் கொண்டே ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுக்கிறார். ஆனால் அந்த ரசிகர் சரியாக செல்பி எடுக்க முடியாமல் தடுமாறுகிறார். இதனைப் பார்த்த ரன்பீர், அந்த ரசிகரின் செல்போனை வாங்கி அதை வீசி எறிகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரன்பீர் கபூரை இணையவாசிகள் திட்டித் தீர்க்க தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே பாலிவுட் பிரபலங்கள், அதுவும் குறிப்பாக வாரிசு நடிகர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ரன்பீர் கபூரின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மேலும் #angryranbirkapoor என்ற ஹேஷ்டேக் மூலம் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஆனால், இந்த வீடியோ விளம்பரத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஏதேனும் மொபைல் விளம்பரமாக இருக்கலாம் என்றும், இவ்வாறு எதிர்மறை விமர்சனங்கள் மூலம் கவனத்தை கவர்வதற்கான யுக்தியாக இருக்கும் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here