சிங்கப்பூர் கடப்பிதழைக் காண்பிக்க மறுத்த ஆஸ்திரேலிய நபருக்கு $2,400 அபராதம்

சிங்கப்பூர், நவம்பர் 12:
ஆஸ்திரேலியக் குடிமகனாக ஆன பின்னரும் தனது சிங்கப்பூர் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாக கைவிடாத நபர் ஒருவர், குடிநுழைவு அதிகாரிகளிடம் தனது சிங்கப்பூர் கடப்பிதழை காண்பிக்க மறுத்தது தொடர்பாக $2,400 அபராதம் விதிக்கப்பட்டார்.

அந்த நபர் தியோ டிக் யோங் ஜெரோம் லியோனார்டு (69) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு இந்த தண்டனை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) வழங்கப்பட்டது.

குடிநுழைவு சோதனைச்சாவடியில் அதிகாரிகள் அவரது சிங்கப்பூர் கடப்பிதழைக் காண்பிக்கக் கோரியபோது, அவர் அதை சமர்ப்பிக்கத் தவறியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவரது மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இரட்டை குடியுரிமை பிரச்சனை

நீதிமன்ற ஆவணங்களின்படி, தியோ 2000ஆம் ஆண்டு வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றார். பின்னர் 2003 ஆகஸ்டில் ஆஸ்திரேலிய குடிமகனாக ஆனார். எனினும், சிங்கப்பூர் குடியுரிமையை கைவிட எந்தச் செயலையும் மேற்கொள்ளவில்லை.

அதற்குப்பின், அவர் 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் சாங்கி விமான நிலையம் வழியாக சிங்கப்பூருக்கு வந்தபோது தனது ஆஸ்திரேலியக் கடப்பிதழை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2008ஆம் ஆண்டு சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் நிலையம் வந்தபோதும் அவர் ஆஸ்திரேலியக் கடப்பிதழையே அதிகாரிகளிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, குடிநுழைவு அதிகாரிகள் அவரை சோதனைச்சாவடியில் கைது செய்தனர்.

அவரின் நடவடிக்கை குடிநுழைவு விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்பட்டதால், நீதிமன்றம் அபராதம் விதித்து விடுவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here