சமூக வலைத்தளங்களில் டான்ஸ் ஆடி சினிமாவிற்குள் நுழைந்த நடனக் கலைஞர் ரமேஷ் நேற்று முன் தினம் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சினியுலகையே துயரில் ஆழ்த்தியுள்ளது.
டிக்டாக், இன்ஸ்டாகிராம்போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய நடனத்திறமையால் நடனமாடி பிரபல்யமடைந்தவர் தான் நடனக் கலைஞர் ரமேஷ். இவரின் நடனத்தை பார்ப்பதற்கு பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், இவர் ஒரு மிக பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவந்த நிலையில், இதன் பிறகு தான் துணிவு, ஜெயிலர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், இவருக்கு ஒரு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். இதனால் இவர் தினமும் குடித்து விட்டு இரண்டு மனைவிகளுடனும் சண்டையிட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதன்போது நேற்றைய தினம் ரமேஷ் திடீரென 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரின் தற்பொலை சினிமா வட்டாரத்திலுள்ளவர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இவரின் தற்கொலைக்கு மனைவிகள் தொல்லை தான் காரணம் எனவும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.