சிரம்பான் Medan Selera Sri Kendong  இருந்த 15 ஸ்டால்களில் 5 கடைகள் தீயில் அழிந்தன

சிரம்பான் Medan Selera Sri Kendong  உணவுக் கூடத்தில் உள்ள 15 ஸ்டால்களில் 5 கடைகள் திங்கள்கிழமை (ஜன.30) காலை தீயில் எரிந்து நாசமானது. திங்கள்கிழமை காலை 5.14 மணியளவில் பொதுமக்களிடமிருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்ததையடுத்து, கோத்தா மற்றும் தம்பின் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 16 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோத்தா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் அஹ்மத் ஹஃபீஸ் மாட் ஜூனோ கூறினார்.

இரண்டு கடைகள் முழுவதுமாக நாசமாகியது. மற்ற மூன்று கடைகள் 80% சேதமடைந்தன. பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவியது. உயிர் சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காலை 7.27 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார். தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட மொத்த இழப்புகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றார். உணவு கடைகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாக நம்பப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here