காவல் நிலையத்தில் காத்திருக்குமாறு கூறியதால், கோபமடைந்து நாற்காலியை விட்டெறிந்த நபர் கைது

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் போது, காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு நபர், அவரது தொலைபேசியில் ஆபாசப்படங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பண்டான் இண்டாவில் ஒரு திருடன் தனது பையைத் திருடியதால், தனது அடையாள அட்டையை இழந்துவிட்டதாக குறித்த நபர் கூறியதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக், இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

குறித்த ஆடவர் நேற்று (ஜனவரி 29) அம்பாங் ஜெயா காவல்துறை தலைமையகத்திற்கு புகார் அளிக்கச் சென்றார், துணை விசாரணை அதிகாரியிடம் அவர் தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறிக்கை தாக்கல் செய்ய காத்திருந்ததார், நீண்ட நேரம் காத்திருக்குமாறு கூறியதால் அவர் கோபமடைந்தார்.

“அவர் பின்னர் கோபமடைந்து, எழுந்து நின்று வாசலில் நாற்காலியை ஒன்றை வீசினார், தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என்றும் கூச்சலிட்டார்,” என்று அவர் கூறினார்.

இதனால் போலீசார் அவரை சோதனையிட்டனர், அவரது தொலைபேசியில் பல ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து “வங்கியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ள 29 வயதான நபர், கைது செய்யப்பட்டு, பிப்ரவரி 1 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

மேலும், அவர் புதிய அடையாள அட்டையை பெறுவதற்கு, அபராதம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் அறியமுடிகிறது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here