சிபு: பாசார் தமு சிபு ஜெயாவில் இன்று காய்கறிகளை வாங்கிய ஒருவரிடமிருந்து சில வியாபாரிகள் போலியான RM20 நோட்டுகளைப் பெற்றதாகக் கூறியதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரும்பாலும் ஐபான் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்க, குழந்தையுடன் வந்த பெண் ஒருவரே இந்த போலி நோட்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிபு காவல்துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலியை தொடர்பு கொண்டபோது, சம்பவம் குறித்து தனது துறைக்கு எந்த புகாரும் வரவில்லை என்றார்.
பாதிக்கப்பட்ட வணிகர்கள் முன் வந்து புகாரினை செய்யுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதனால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.








