RM15 இலட்சம் மதிப்புள்ள சியாபு பறிமுதல்- ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட எழுவர் கைது

கடந்த வாரம் Pokok Sena மற்றும் Bertam ஆகிய இடங்களில் நடந்த சோதனைகளில், சீன தேநீர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட RM15 இலட்சம் மதிப்புள்ள 41.81 கிலோகிராம் சியாபுவை போலீசார் கைப்பற்றியதுடன், ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேரை கைது செய்ததாக, பினாங்கு காவல் துறைத் தலைவர், டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.

“சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் போக்கோக் சேனாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த முதல் சோதனையில், 26 முதல் 54 வரையிலான ஐந்து குடும்ப உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து 11 பிளாஸ்டிக் சீன தேநீர் பாக்கெட்டுகள் மற்றும் RM412,112. மதிப்புள்ள 11,448.70 கிராம் மதிப்புள்ள சியாபு கொண்ட இரண்டு பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் “சியாபுவை விநியோகிப்பதற்காக பேக்கேஜ் செய்ய பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பெர்தாமில் உள்ள கியோஸ்க் ஒன்றில் இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரோடுவா மைவியில் RM1.09 மில்லியன் மதிப்புள்ள 30,358 கிராம் சியாபு கொண்ட 30 பாக்கெட் சீன தேநீர் கைப்பற்றப்பட்டதாகவும், அங்கு ஒரு வர்த்தகரும் வேலையில்லாத ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் முகமட் ஷுஹைலி கூறினார்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட எழுவரிடமிருந்தும் தோயோத்தா ஆல்பர்ட், ஒரு வியோஸ் மற்றும் ஃபோர்டு ரேஞ்சர் ஆகிய மூன்று கார்களையும், RM1,000 ரொக்கம் என்பவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று  முகமட் ஷுஹைலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here