வீடு திடீரென தீப்பிடித்ததில் தூங்கிக்கொண்டிருந்த தாயும் இரு பிள்ளைகளும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்

கோலா சிலாங்கூர், Lorong Tiga, Bukit Belimbing உள்ள அவர்களது வீட்டில், திடிரென ஏற்பட்ட தீபரவலில் ஒரு தாயும் அவரது இரண்டு மகள்களும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

நேற்று காலை 6.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், 34 வயதுடைய பெண்ணும், ஒன்பது மற்றும் இரண்டு வயதுடைய அவரது இரண்டு மகள்களும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது, தீப்பரவல் ஏற்பட்டதாகவும் ஆனால் அவர்கள் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியே வந்தால் உயிர் பிழைத்தனர் என்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர், டத்தோ நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.

காலை 6.40 மணியளவில் தீ விபத்து குறித்து அவர்களுக்கு அழைப்பு வந்ததும், தஞ்சோங் காராங், பெஸ்தாரி ஜெயா, கோலா சிலாங்கூர் மற்றும் செகிஞ்சான் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

“சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில், அந்த வீடு தீயில் எரிந்து நாசமானது, “இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுமக்களின் உதவியால் உயிர் பிழைத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

வீட்டின் கூரை 70 விழுக்காடு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், சம்பவத்திற்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here