ஜாலான் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில், தனது முதலாளியின் மரணத்திற்கு காரணமான சந்தேகத்தின் பேரில் உதவி சமையல்காரர் ஒருவர் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக, கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.
தற்போது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும், 55 வயதான சந்தேகநபரிடம் மேற்கொண்ட சோதனையில், அவருக்கு முந்தைய குற்றவியல் பதிவுகள் இல்லை என்றும், போதைப்பொருள் சோதனையிலும் அவர் எதிர்மறையான முடிவுகளையே பெற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
“இதுவரை, இந்த வழக்கில் ஐந்து சாட்சிகளின் வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
நேற்று மாலை உணவகம் ஒன்றின் பின்னால் ஏற்பட்ட தகராறில், சந்தேக நபர் தனது 68 வயது முதலாளியை மரத்துண்டால் தாக்கியதாக கூறப்படுகிறது.








